MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

politics

Childline 1098 Staff Unpaid for Two Months: Critical Child Protection Helpline Paralyzed

குழந்தைகள் நலனுக்கான #Childline (1098) அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.…

Flagging reports that dedicated helpline staff and counsellors operating the emergency #Childline (1098) child welfare service in Tamil Nadu have not received salaries for over two months, Udhayanidhi Stalin expressed shock at the state's neglect of child protection infrastructure. With staff facing severe personal distress, critical child rescue operations and emergency interventions for children in distress are severely undermined. Udhayanidhi urged immediate budgetary clearance to settle pending wages.

குழந்தைகள் நலனுக்கான #Childline (1098) அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. ஊதியம் இல்லாத நிலையில் Childline பணியாளர்கள் சிலர் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இரவு நேரங்களில் மாற்று வேலைகளுக்கு செல்லக்கூடிய அவலம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். இன்னும் சிலர் இந்தப் பணியே வேண்டாம் என விலகும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் Childline அமைப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதில் பணிபுரிவோரின் நலனும் முக்கியம். எனவே Childline பணியாளர்களின் ஊதியப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து, அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

Explore Makkal Veeran