MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

community

Birth Anniversary of Perunthalaivar Kamarajar: Honoring the Visionary Who Opened School Doors for Millions

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் இன்று. தமிழ்நாடெங்கும் மூடப்பட்ட 6000-க்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்து, மதிய…

Birth Anniversary of Perunthalaivar Kamarajar: Honoring the Visionary Who Opened School Doors for Millions
Birth Anniversary of Perunthalaivar Kamarajar: Honoring the Visionary Who Opened School Doors for Millions

On the birth anniversary of former Chief Minister 'Karma Veerar' K. Kamarajar, Udhayanidhi Stalin honored the legendary leader whose educational revolution laid the groundwork for modern Tamil Nadu's social development. Kamarajar reopened over 6,000 closed rural schools, pioneered the historic midday meal scheme to eliminate child hunger in classrooms, and provided free uniforms and textbooks. Udhayanidhi paid homage to the leader who made education a universal reality for the poorest households.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் இன்று. தமிழ்நாடெங்கும் மூடப்பட்ட 6000-க்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்து, மதிய உணவு திட்டம் - இலவச சீருடை - பாடப்புத்தகங்கள் என கல்வி வளர்ச்சிக்கும், தொழில்துறை வளர்ச்சி - அணைகள் உருவாக்கம் என தமிழ்நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்கும் காமராசர் ஆற்றிய பங்களிப்புகள் மகத்தானவை. சென்னை மெரினா சாலைக்கு காமராசர் அவர்களின் பெயரை சூட்டியது - குமரியில் நினைவு மண்டபம் அமைத்தது - காமராசரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக நடைமுறைப்படுத்தியது என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காமராசருக்கு பல்வேறு பெருமைகளைச் சேர்த்தார்கள். கலைஞர் அவர்கள் வழியில், நம்முடைய தலைவர் @mkstalin அவர்கள், நம் திராவிட மாடல் ஆட்சியின் போது, காமராசர் கல்லூரி மேம்பாட்டுத்திட்டம், பரம்பிக்குளம் - ஆழியார் திட்டத்துக்கு அடித்தளம் அமைத்ததற்காக காமராசர் அவர்களுக்கு திருவுருவச்சிலை - திருச்சியில் காமராசர் பெயரில் மாபெரும் அறிவுலகம் என காமராசரின் புகழை மென்மேலும் போற்றினார்கள். கல்விக்கண் திறந்த காமராசர் அவர்களின் புகழ் ஓங்கட்டும்! #Kamarajar

Explore Makkal Veeran