MAKKAL VEERAN INDEPENDENT FAN PAGE

education

Udhayanidhi Stalin Demands Uncompromising Justice in Vandalur Schoolgirl Gang Rape, Slams Ruling Regime Over Shameless Cover-Up and Campus Insecurity

சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் - அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே? சென்னை வண்டலூர் அருகே…

Tamil Nadu Leader of the Opposition and DMK Youth Wing Secretary Udhayanidhi Stalin has launched a scathing attack on the state government following the shocking daytime abduction and gang rape of a girl student from a government school campus near Vandalur, Chennai. Expressing profound horror over the brazen assault, Udhayanidhi excoriated the ruling administration for presiding over a total collapse of school safety, calling out the hypocrisy of a regime that churns out hollow publicity slogans while failing to protect vulnerable students inside state-run classrooms. Condemning reports that local police attempted to hush up the atrocity—even concocting a fabricated snakebite narrative to shield the Chief Minister’s scheduled campaign visit for the Maduranthakam by-election—Udhayanidhi termed the cover-up an unforgivable betrayal of governance. He denounced law enforcement for intimidating the grieving parents and seizing their phones instead of apprehending the perpetrators. Udhayanidhi underscored that government schools are historic egalitarian sanctuaries championed by Thanthai Periyar and Muthamizharignar Kalaignar to emancipate female learners, warning that state negligence threatens working-class faith in public education. Demanding immediate, comprehensive medical care and rehabilitation for the victim, the Opposition Leader insisted on unsparing prosecution of every culprit and complicit official under statutory child protection laws. Udhayanidhi cautioned the dispensation that sacrificing child safety for short-term electoral optics will trigger a decisive popular reckoning across Tamil Nadu.

சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் - அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே? சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளி மாணவியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பில் No compromise என்று சொல்லிக்கொள்ளும் Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியில், அரசுப்பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு. மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் வருகிறார் என்று சொல்லி, இந்த சம்பவத்தை காவல்துறையும் - அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சி செய்வதும் - பாம்புக்கடி என்று மடைமாற்றுவதும், தமிழ்நாடு எவ்வளவு மோசமானவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க வக்கின்றி பாதிக்கப்பட்ட பெற்றோரின் செல்போன்களை கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என்று போலீஸ் தரப்பில் மிரட்டல் விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த Reels ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கு, குற்றவாளிகளுக்கு கூடுதல் தைரியத்தை அளிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் சித்திரவதை செய்வது போல் இருக்கிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப்பள்ளி உட்பட அனைத்துப்பள்ளி வளாகங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இடைத்தேர்தல் வருகிறது என்று இந்த கொடுமையை மூடி மறைக்க முயற்சித்தால், மக்கள் இந்த ஆட்சியாளர்கள் முகத்தில் கரியை பூசுவது உறுதி.

Explore Makkal Veeran